‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ அமேசானில் புதிய அறிமுகம் வந்துள்ளது.
அமேசான் சார்பில் ‘வேலன்டைன்ஸ் டே ஸ்டோர்’ உருவாக்கப்பட்டு இருக்கிறது. அமேசான் இணையதள பக்கத்துக்கு சென்று வேலன்டைன்ஸ் டே ஸ்டோர் மூலம் பரிசு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்கி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற தளத்தை அமேசான் ஏற்படுத்தி இருக்கிறது. வேலன்டைன்ஸ் டே ஸ்டோரில் புதிய மலர்கள், வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள், சாக்லேட்டுகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்காரம், சமையல் உபகரணங்கள், ஆடை அலங்கார பொருட்கள், அழகு சாதனங்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு பொருட்களை வீட்டில் இருந்தபடியே வாங்க முடியும்.
18 முதல் 24 வயதுடைய வாடிக்கையாளர்கள் தங்கள் பிரைம் மெம்பர்ஷிப்பில் 50 சதவீதம் தள்ளுபடியை பெற முடியும். பிரைமுக்கு ‘சைன் அப்’ செய்து தங்கள் வயதை சரிபார்த்து உடனடியாக 50 சதவீதம் கேஷ்பேக் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறலாம்.
வேலன்டைன்ஸ் டே ஸ்டோரில் பாம்பே சேவிங் கம்பெனியில் இருந்து ஆண் மற்றும் பெண்களுக்கான அற்புதமான பரிசுகளின் வகைகள் 35 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதேபோல், காட்பரி டைரி மில்கின் பிரீமியம் சாக்லேட் ரூ.617-க்கும், 15 வகையான புதிய ரோஜாக்களுடன் மலர் பூங்கொத்து ரூ.588-க்கும், அன்புக்குரியவர்களை கவரும் விதமாக சாப்ட் டெடி பியர் ரூ.399-க்கும், சாம்சங் கேலக்சி எம் 02 எஸ். மாடல் செல்போன் ரூ.9 ஆயிரத்து 999-க்கும் என ஏராளமான பரிசு வகைகள் கிடைக்கிறது. கடிகாரம், ஆபரணங்கள், கைப்பைகள், மணிபர்சுகள், செல்போன்கள், ஸ்பீக்கர்கள், லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள், அழகு சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களையும் இந்த ஸ்டோரில் வாங்க முடியும்.
அன்புக்குரியவர்களுடன் பரிசு பொருட்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அமேசான் ஏற்படுத்தி தந்துள்ளது. தகவல் அமேசான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.