வோடோஃபோன் – ஐடியா மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் சலுகை கட்டணத்தை உயர்த்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சலுகை கட்டணம்தான் உயரும் எனவும் இதற்கு காரணமாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்திய டெலிகாம் சந்தையில் ரீசார்ஜ் கட்டணங்களின் விலை 15-20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் முதல் கட்டமாக வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் தனது நிதிநிலையை சரி செய்ய உயர்த்த முடிவு செய்துள்ளது எனவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வோடோஃபோன் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை 20% உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE- ’ஜியோவுடன் கூட்டணி வைக்க காரணம் இதுதான்’- உண்மையை உடைத்த மார்க்!
இப்போது போஸ்ட்பெய்ட் கட்டணத்தை தொடர்ந்து ப்ரீபெய்ட் கட்டணத்தையும் வோடோஃபோன் உயர்த்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல்லும் கட்டணங்களை உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.