வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை வழங்கிய வோடோஃபோன் – ஐடியா!

வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியாக புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

வோடோஃபோன் – ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் தனது பிரத்யேக டிஜிட்டல் சலுகையாக ரூ. 399-ஐ வழங்கியுள்ளது.

இந்த சலுகை வலைதளத்தில் புதிய சிம் வாங்கும் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த விலையில் ப்ரீபெய்ட் சலுகையில் டேட்டா, எஸ்.எம்.எஸ். மற்றும் ரூ. 297 சலுகையை விடவும் அதிக வேலிட்டியும் தரப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், திரைப்படங்கள் மற்றும் டிவி சேவைகளும் வழங்கப்படுகின்றன. போஸ்ட் பெய்ட் சலுகையில் 150 ஜிபி டேட்டா, ரோல் ஓவர் வசதி, எஸ்.எம்.எஸ்-கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

READ MORE- பப்ஜி இந்திய வெளியீட்டில் புது திருப்பம்?

ப்ரீபெய்ட்டில் 56 நாட்களுக்கு 1.50ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்களும், போஸ்ட் பெய்டில் 40 ஜிபி டேட்டா, ஒரு மாதத்திற்கு 100 எஸ்.எம்.எஸ்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version