அடுத்ததாக வாட்ஸ் ஆப்பில் வெளியாகும் புதிய அப்டேட்..!!

whats app
Whatsapp new feature

மற்றவருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை திருத்துவதற்கான வசதியுடன் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யப்படவுள்ளது தெரியவந்துள்ளது.

பயனர்களின் வசதிக்கு ஏற்ப வாட்ஸ் ஆப் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு இதுவரை வெளியிடப்பட்ட அப்டேட்டுகள் நிச்சயம் பயனர்களிடம் வரவேற்பு பெற தவறியது இல்லை. சமீபத்தில் குறுஞ்செய்திகளுக்கு எமோஜி வாயிலாக மறுமொழி தரும் வசதியுடன் வாட்ஸ் அப் வந்தது.

இது பயனர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கிடையில் புதியதாக குறுஞ்செய்திகளை அனுப்பிவிட்டு, தவறை திருத்துவதற்கான வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும் இந்த வசதி, சோதனை முடிந்தவுடன் அனைத்து பயனர்களின் செல்போன்களில் கிடைக்கும்.

Exit mobile version