இன்ஸ்டாகிராம் வசதியை பெறும் வாட்ஸ் ஆப்- வருகிறது புதிய அப்டேட்..!!

Whatsapp new feature
whats app

இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் இருப்பது போன்று குறுஞ்செய்தி அனுப்பும் நபருடைய ஸ்டேட்டஸை அப்போதே பார்க்கும் வசதியுடன் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யப்படவுள்ளது.

அவ்வப்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. விரைவில் அந்த செயலியில் வரக்கூடிய புதிய அம்சம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விரைவில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் மற்றும் மெசேஜ் இரண்டும் ஒன்றாக இணையவுள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ் ஆப்பில் குறுந்தகவலையும் ஸ்டேட்டஸையும் தனித்தனியாகவே பார்க்க முடியும். வருகின்ற புதிய அப்டேட் மூலம் மெசேஜ் அனுப்பும் நபருடையே ஸ்டேட்டஸை அவருடைய டி.பி-யை கிளிக் செய்வதன் மூலம் பார்க்கும் வகையிம் வாட்ஸ் ஆப் மேம்படுத்தவுள்ளது.

ஏற்கனவே இந்த வசதி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ளது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த புது அப்டேட் எப்போது பயனர்களின் வாட்ஸ் ஆப்புக்கு அப்டேட் செய்யப்படும் என்று தெரியவில்லை. இதனுடன் வாட்ஸ் ஆப் டெஸ்க்டாப் வெர்ஷனுக்கும் புதிய அப்டேட் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version