இந்த வருட தொடக்கத்திலேயே புதிய சாதனையை வாட்ஸப் படைத்துள்ளது.
புது வருடம் பிறந்ததில் இருந்து குறிப்பாக புத்தாண்டு அன்று வாட்ஸப் மூலம் சுமார் 140 கோடிக்கும் அதிகமானோர் வாழ்த்துகளை பகிர வாய்ஸ் மற்றும் வீடியோகால் செய்துள்ளனர்.
இது ஒரே நாளில் வாட்ஸப்பில் பதிவான அதிகபட்ச அழைப்புகள் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வருடாவருடம் வாட்ஸப்பில் இது புத்தாண்டு அன்று அதிகபட்சமாக நடைபெறுவதுதான் என்றாலும் மற்ற வருடங்களை ஒப்பிடும் போது இது அதிகபட்சம் எனவும் இதற்கு கொரோனா ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
READ MORE- பாஜிகேம் இந்திய வெளியீடு அறிவிப்பு!
கடந்த ஆண்டை விட இது ஐம்பது சதவீதம் அதிகம் ஆகும். இதேபோலவே, இன்ஸ்டா, மெசேஞ்சர் போன்றவையும் அதிகமான க்ரூப் கால்களை சந்தித்திருக்கிறது. அதேபோல புத்தாண்டு அன்று அதிகப்படியான 5.5 கோடி லைவ்களை சந்தித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.