அடுத்த வருடம் வாட்ஸப்பில் வரும் புது அம்சங்கள் என்னென்ன?

அடுத்த வருடம் வாட்ஸப்பில் அப்டேட் ஆகும் புது அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

அடுத்த வருடம் வாட்ஸப் நிறுவனம் பயனாளர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. 2020ன் இறுதியில் இருப்பதால் உலகில் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளுள் ஒன்றாக இருக்கும் வாட்ஸப்பில் என்ன மாதிரியான புது அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிந்து கொள்ள பயனர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அதன்படி, பல புதிய அம்சங்கள் குறித்த அப்டேட்டை அடுத்த வருடத்தில் இருந்து செயல்படுத்தப்படும் என வாட்ஸப் தெரிவித்துள்ளது. அதன்படி, முதலில் வாட்ஸப் ஆடியோ வசதி மற்றும் வீடியோ கால் வசதி டெஸ்க்டாப்பில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது வாட்ஸப் நிறுவனம். முதலில் பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த வருடம் பயனாளர்களுக்கு பரவலாக பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது.

READ MORE- குறைந்த விலையில் டைவாவின் ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

அதேபோல, வாட்ஸப்பின் புதிய விதிமுறைகளை பயனர்கள் ஒப்பு கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அக்கவுண்ட் டெலிட் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக, மல்டிபிள் இமேஜ் மற்றும் வீடியோக்களை தேர்வு செய்து அனுப்பும் வசதியும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version