புதிய பிரைவசி பாலிசியில் பின்வாங்கிய வாட்ஸப்!

புதிய பிரைவசி பாலிசியில் வாட்ஸப் நிறுவனம் பின்வாங்கியுள்ளது.

சமீபத்தில் வாட்ஸப்பின் புதிய பிரைவசி பாலிசி பயனாளர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியை தொடர்ந்து தனது முடிவை பரீசலிப்பதாக வாட்ஸப் தெரிவித்துள்ளது.

இந்த புதிய பிரைவசி பாலிசியை பயனர்கள் ஏற்று கொள்ள பிப்ரவரி 8ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்த நிலையில் தற்போது மே 15 வரை இதனை நீட்டித்துள்ளது வாட்ஸப்.

READ MORE- ஸ்மார்ட்ஃபோன் விலையை குறைத்த ஒப்போ!

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வாட்ஸப் தெரிவித்திருப்பதாவது, ‘வாட்ஸப்பின் புதிய பாலிசி குறித்து அனைவருக்கும் குழப்பம் இருந்து வரும் நிலையில், அது குறித்து விரைவில் பயனர்களுக்கு உள்ள குழப்பங்களை நீக்குவோம்.

சிறந்த தகவல் பரிமாற்ற தளமாக வாட்ஸப்பை மாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வோம். கருத்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ எனவும் சொல்லப்பட்டுள்ளது.

Exit mobile version