ரூ. 10,000-க்கும் குறைவான விலையில் அறிமுகமாகும் நவீன ரெட்மி 10ஏ போன்…!!

redmi 10a

ஷாமி நிறுவனம் தனது ரெட்மி பிராண்டின் கீழ் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகும் தேதியை அமேசானில் அறிவித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஷாமி நிறுவனம், இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான ரெட்மிக்கும் பெரிய சந்தை உருவாகியுள்ளது. தற்போது இந்நிறுவனம் புதியதாக தயாரித்துள்ள 10ஏ என்கிற ஸ்மார்ட்போன் இந்தியாவின் டெக் உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமேசான் வலைதளத்தில் ரெட்மி நிறுவனம் 10ஏ மாடல் போனின் விற்பனை தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 20-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வரவுள்ளது. ஏற்கனவே சீனாவில் இந்த மாடல் விற்பனைக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ரெட்மி 10ஏ போன் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. எனினும் இந்த போனில் 13 எம்.பி இமேஜ் சென்சார் கேமரா இருக்கும் என்றும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 எம்.பி சென்சார் கேமரா இடம்பெற்றிருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ரெட்மி 10ஏ மாடலில் 6 ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி வரை சேமிப்பு வசதி இடம்பெறலாம் என தெரிகிறது. எனினும் 512ஜிபி வரை சேமிப்பை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். மேலும் 6.53 அங்குல டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி மற்றும் 10வாட் நிலையான சார்ஜிங் வசதி போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என பல்வேறு தொழில்நுட்ப ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவை அனைத்தும் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலில் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும். இந்தியாவுக்கான மாடலில் ஒரு சில தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. ரெட்மி 10ஏ போன் சீனாவில் 699 யுவான் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்பு இந்தியாவில் ரூ. 8300 ஆகும். எனினும், இந்த போன் தொடர்பான முழு விபரங்களையும் தெரிந்துகொள்ள ஏப்ரல் 20-ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.

Exit mobile version