ஷாவ்மி நிறுவனம் ஸ்மார்ட் பல்ப் அறிமுகம்

ஷாவ்மி நிறுவனம் ஸ்மார்ட் பல்ப் அறிமுகம் செய்துள்ளது.

எம்.ஐ. என்று சொல்லப்படும் ஷாவ்மி நிறுவனம் ஒரு ஸ்மார்ட் பல்பு அறிமுகம் செய்துள்ளது. ஷாவ்மி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை மட்டுமில்லாமல் இன்னும் சில எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளையும் அறிமுகம் செய்துவருகிறது.

அந்த வகையில், ஒரு ஸ்மார்ட் பல்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் கன்ட்ரோல் இருப்பதுதான் சிறப்பு அம்சம். இந்த ஸ்மார்ட் பல்பை சாதாரணமான B22 பல்பு ஹோல்டரில் பொருத்திக் கொள்ளலாம்.
இது பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் கிளாட் அலுமினியத்தால் ஆனது. கிட்டத்தட்ட 16 மில்லியன் வண்ணங்களை இந்த பல்பு ஒளிரச் செய்கிறது. ஆயுட்காலம் 11 வருடங்களை கொண்டது என சொல்லப்படுகிறது.

இந்த பல்பை மொபைல் ஆப் மூலமாகவும் இயக்க முடியும். குறிப்பாக கூகுள் மற்றும் அலெக்ஸா போன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியும் இந்த பல்பில் உள்ளது. இதனால் சாதாரணமாக பேசிக்கொண்டே இந்த பல்பை இயக்கலாம். 9W பவர், 950 லுமினஸ் பிரைட்னஸ், 25,000 மணி நேரம் நீடித்து உழைக்கக்கூடியது.

Exit mobile version