ஸ்மார்ட்ஃபோன் அறிமுகத்தில் சியோமின் அடுத்த நகர்வு!

சியோமி நிறுவனம் தனது ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

சியோமி நிறுவனம் தனது ஃபோல்டபிள் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில், மூன்று மடிக்கக்கூடிய வகையில் ஃபோல்டஃபிள் ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்ஃபோன் மூன்று வெவ்வேறு மடிப்புகளை கொண்டிருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் சியோமி நிறுவனத்தின் இந்த மூன்று மாடல்கள் வெளிப்புறம், உட்புறம் மடிக்கும் தன்மை மற்றும் கிளாம்ஷெல் கொண்டிருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

READ MORE- பிஎஸ்என்எல் அறிவித்துள்ள குறைந்த விலை சலுகை!

இந்த வெளிப்ப்புற தன்மை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 8 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும். இதற்கு முன்பு ஒப்போ, விவோ மற்றும் சியோமி ஆகியவை இணைந்து நான்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்களை அடுத்த ஆண்டு வெளியிட இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version