பிறப்பு சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்வது கட்டாயமாகும். தமிழக அரசின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு பிறப்பும் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு இறப்பும் 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பிறப்பு சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்ய:

 சென்னையில் உள்ளவர்கள்  https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணையதளம் வாயிலாகவும், பிறபகுதியில் உள்ளவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள பக்கத்திலும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற பக்கத்திற்கு சென்றால் பிறப்பு சான்றிதழ் தேடுதல் எனும் பக்கம் இணையத்தில் தோன்றும். இதை கிளிக் செய்ய வேண்டும்.

தமிழில் பதிவிறக்கம் செய்ய தமிழ் என்பதை கிளிக் செய்து அதில் கேட்கும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் Generate என்பதை கிளிக் செய்தால் சான்றிதழ் திரையில் தோன்றும். அடுத்ததாக பிரிண்ட் என்பதை கிளிக் செய்து பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version