திருப்பூரில் ஹீமோபிலியா தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ரத்த உறைவு மற்றும் அணு குறைபாட்டால் சிலருக்கு உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் திடீரென ஏற்படும் ரத்தக்கசிவு அல்லது ரத்தம் ஏற்பட்டால் இரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறி கொண்டே இருக்கும். இதற்கு ஹீமோபிலியா என்று பெயர்.
திருப்பூர் மாவட்டத்தில் இதற்கான போதிய மருந்துவ வசதிகள் இல்லாததால் கோவை மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் சென்று வரும் நிலை இருந்தது. இந்த நிலையில் மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று தற்போது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை உணவு மருந்து கட்டுப்பாட்டு கழகம், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி டீன் கூறும்போது, “ ஹீமோபிலியா நோயாளிகளுக்கு திடீர் ரத்தகசிவு ஏற்பட்டால் உடனடியாக செலுத்த வேண்டிய பேக்டர் 8 & பேக்டர் 9 தடுப்பூசி அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்டது. இனி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள் இங்கேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக ஆலோசனை வழங்க செவிலியர் உள்பட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார். ஹீமோபிலியா பெடரேஷன் ஆப் இந்தியா நிர்வாகி மணிவண்ணன் கூறுகையில், ஒரு தடுப்பூசி ₹25,000-₹30,000 .இதை இலவசமாக அளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி என்று கூறினார்.
-பா.ஈ.பரசுராமன்.