படத்தில் காட்டியவாறு ஒரு மடிப்பின் மீது அமர்ந்து கால்களை மடக்கி கால்கள் மீது வைத்துக்கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்க வேண்டும். உங்கள் நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் மெதுவாக காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். கவனம் முழுவதும் சுவாசத்தில் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 10-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். பின் 5 நிமிடங்கள் இதே நிலையில் அமர்ந்திருக்க நல்ல பலன் தரும்.
பலன்கள்:
*மன அழுத்தம், பதற்றம் இவற்றை குறைக்கிறது.
*தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
*செரிமானத்தை அதிகரிக்கிறது.
*உடல் எடையை குறைக்க உதவுகிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
*இடுப்பு பகுதி தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
*முதுகுவலியை போக்குகிறது.
யாரெல்லாம் இதை செய்யக்கூடாது:
- முழங்கால் வலி இருந்தாலோ, அறுவை சிகிச்சை செய்து இருந்தாலோ வஜ்ராசனம் செய்வதை தவிருங்கள்.
- முதுகு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- முழங்கால் வலி உள்ளவர்கள் இதை செய்யக் கூடாது.
-பா.ஈ.பரசுராமன்.