வங்கி வராக்கடன் ₹10 லட்சம் கோடி தள்ளுபடி மத்திய அரசு அறிவிப்பு

வங்கிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ₹10 லட்சம் கோடி வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பாகவத் கே.காரட் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2017-2018ம் ஆண்டில் ₹1,61,328 கோடியாக இருந்த வங்கி கடன் தள்ளுபடி 2018-2019ம் ஆண்டுகளில் ₹2,36,265 கோடியாக அதிகரித்தது.

பின்னர் 2019-2020ம் ஆண்டில் ₹2,34,170 கோடி, 2020-2021ம் ஆண்டில் ₹2,02,781 கோடி, 2021-2022ம் ஆண்டில் ₹1,57,096 கோடி என படிப்படியாக குறைந்தது. ஒட்டுமொத்தமாக 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் ₹9,91,640 கோடி வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 2020-2021ம் ஆண்டில் 2,840 பேர் என்ற அளவில் இருந்தது. இந்த எண்ணிக்கை 2021-2022ம் ஆண்டில் 2,700 ஆக குறைந்துள்ளது என்றார்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version