விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ₹2000 என ஆண்டுக்கு ₹6000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 38.24 லட்சம் விவசாயிகள் வங்கிக் கணக்கில் 11தவணைகளாக நேரடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 12வது தவணை தொகையை விடுவிப்பதில் சில புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி, ஆகஸ்டு மாதம் முதல் அனைத்து தவணைத் தொகைகளும் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து திட்ட பயனாளிகளும் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை கொண்டு ஆதார் எண் பதிவை உறுதி செய்துகொள்ளலாம். இதில் சிரமம் உள்ளவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
