ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ரேஷன் கடைகளில் யுபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், முதல்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலைக்கடைகளை மாதிரி நியாயவிலைக்கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றார். மேலும், நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.