பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு

குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது. அந்த வகையில் குழந்தை பிறந்தவுடனே இறக்கும் நிகழ்வுகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இதுதொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அந்த பெண் ஊழியர் ஏற்கெனவே பிரசவ கால விடுப்பில் இருந்தாலும், அந்த விடுப்பை வேறு விடுப்பாக மாற்றிக்கொண்டு குழந்தை இறந்த நாளில் இருந்து 60 நாட்கள் கூடுதலாக சிறப்பு விடுப்பு வழங்கப்படும். பிரசவம் ஆனதில் இருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுப்பு பெற தகுதி உண்டு என்றும் கூறியுள்ளது.

Exit mobile version