DTCP அறிவிப்பு: இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி பெற நாளை முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என டிடிசிபி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நகர் ஊரமைப்பு துறை (டிடிசிபி) இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: ஒற்றை சாளர முறைக்காக, ஏற்படுத்தப்பட்ட இணையதளம் வாயிலாக மனைப்பிரிவு அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செப்டம்பர் 15ம் தேதி முதல் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் கட்டட அனுமதி, நில வகைபாடு மாற்றம் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே பெற்று அனுமதி வழங்கப்படும். எனவே, அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version