பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்காக, அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஜனவரி 14ம் தேதி தொடங்கி, 3 நாட்கள் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஜனவரி 11-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 30 நாட்களுக்கு முன்னதாகவே அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. https://www.tnstc.in/home.html,https://www.redbus.in/, www.busindia.com, www.makemytrip.com ஆகிய இணையதளங்கள் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக தற்போது 800 அரசு விரைவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. 100% இருக்கைகளில் பயணிக்கலாம் என அரசு அண்மையில் அனுமதி அளித்துள்ளதால், பண்டிகை காலத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.