ஆக்ஸ்போர்ட் பல்கலை., கொரோனா தடுப்பூசியின் விலை?.. சீரம் நிறுவனம் திட்டம்

அவசர கால அனுமதிக்கு விண்ணப்பித்துள்ள, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் விலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

மனித உயிர்களை கொன்று குவித்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான, தடுப்பூசி பரிசோதனைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்காவின் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு இங்கிலாந்து, பஹ்ரைன் போன்ற நாடுகள் ஏற்கனவே அவசரகால அடிப்படையில் அனுமதி அளித்துள்ளன. இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தொடங்கியுள்ளது.

இதனிடையே, இந்தியாவிலும் பைசர் நிறுவனம் தனது தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி கோரி தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி கோரியுள்ளது. அதைத்தொடர்ந்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் உற்பத்தி உரிமையை பெற்றுள்ள சீரம் நிறுவனமும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பாரத் பயோடெக் நிறுவனமும் அவசர கால அனுமதி வழங்கக் கோரி அடுத்தடுத்து விண்ணப்பித்து உள்ளன.

இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் 250 ரூபாய் எனும் விலையில் விற்பனைக்கு கொண்டுவர சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version