பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து 7 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே

அடுத்தடுத்து வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து மேலும் 7 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, மார்ச் 24-ந்தேதி முதல் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கபட்டு வருகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வருகின்றன. இதனால் சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு மேலும் 7 சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 14-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை தினசரி இரவு 9.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் செல்கிறது. மறுமார்க்கமாக மைசூரில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்டரல் வருகிறது.

திருநெல்வேலியில் இருந்து நாளை 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு இரண்டாம் நாள் இரவு 9.35 மணிக்கு சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக பிலாஸ்பூரில் இருந்து வருகிற 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணிக்கு சிறப்பு ரயில்  புறப்பட்டு மூன்றாம் நாள் அதிகாலை 3.15 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

திருநெல்வேலியில் இருந்து வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் புறப்பட்டு இரண்டாம் நாள் பிற்பகல் 3 மணிக்கு மும்பை தாதரை சென்றடையும். மறுமார்க்கமாக தாதரில் இருந்து வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு புறப்பட்டு மூன்றாம் நாள் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இதுதவிர மங்களூர் சென்ட்ரல்-மும்பை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Exit mobile version