டோரோ மெக்கோய் உணவகம் தங்கத்தில் பர்கர் : வைரல் வீடியோ

டோரோ மெக்கோய் உணவகம் தயாரித்த தங்க பர்கர் சர்வதேச அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கொலம்பியா :

உலகில் நாள்தோறும் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அத்தியாவசியமானதாக, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. அந்த வகையில் மேல்நாட்டு உணவு வகையான பர்கர் தயாரிப்பில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வழக்கமாக ரொட்டி, கட்லெட், சாஸ், சீஸ் ஆகியவற்றின் கலவையாகத் தான் பர்கரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு தங்கத்தில் பர்கர் செய்துள்ளனர்.

கொலம்பியாவில் உள்ள டோரோ மெக்கோய் என்ற உணவகம் மிகவும் பிரபலம். இங்கு ஓரோ மெக்கோய் என்ற பெயரில் 24 கேரட் தங்கத்தில் பேகான், டபுள் மீட், டபுள் சீஸ் பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்த உள்ளூர் மக்கள் ஏராளமானோர் உணவகத்திற்கு படையெடுத்து வந்துள்ளனர்.தங்கத்தில் செய்யப்பட்ட உயர்தர பர்கரின் விலை 59 டாலர். இந்திய மதிப்பில் 4,330 ரூபாய் ஆகும். அதுவே சாதாரண பர்கரின் விலை 11 டாலர். இந்திய மதிப்பில் 807 ரூபாய் ஆகும். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி 24 கேரட் தங்க பர்கர் அறிமுகம் செய்யப்பட்டது.

Read more – இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு : 4269 காலியிடங்கள்

இதையடுத்து ப்ரோமோ வீடியோக்களும் வெளியிடப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக டோரோ மெக்கோய் உணவகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தங்க பர்கரின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. சர்வதேச அளவில் தங்க பர்கர் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதுபோன்று தங்கத்தால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் புதுமையானது அல்ல. ஏற்கனவே தங்கத்தால் செய்த ஐஸ்க்ரீம்கள், தோசைகள் உள்ளிட்டவை இணையத்தில் வைரலானது கவனிக்கத்தக்கது.

Exit mobile version