வாட்ஸ் அப் பயன்படுத்த புதிய நிபந்தனை… பயனர்களுக்கு இறுதி எச்சரிக்கை…!!!

இந்தியாவின் வாட்ஸ்-அப் ப்ரைவஸி பாலிசி மே 25 முதல் அமலுக்கு வருவதாக இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் புதிய கொள்கைகளை அறிமுகம் செய்ததிலிருந்தே அதைச் சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்தன.

இதையடுத்து இந்த விதிகள் அமல் ஆகும் தேதி மே 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும், இந்தப் புதிய பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொள்ளாதவர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்ற செய்திகள் பரவி வருகிறது. உண்மையில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது என்ன?

இந்த பிரைவசி பாலிஸி அமலுக்கு வருகிறது என்பது உண்மைதான். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களின் கணக்குகள் நீக்கப்படாது. அதேநேரம், மே 15-க்குப் பிறகு பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொள்ளாதவர்களால், அடுத்த சில வாரங்களில் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தி புதிய செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியாது. ஆனால், அழைப்புகளைப் பெற முடியும் என்று தெரிகிறது. அதோடு உங்கள் கணக்கு புழக்கத்தில் இல்லை (Inactive) என வகைப்படுத்தப்படும். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட கணக்குகள் 120 நாள்களுக்குள் நீக்கிப்படும்.

ஆனால், இந்த 120 நாட்களுக்குள்ளோ அல்லது அதற்குப் பிறகோ கூட பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொண்டு சேவையை எந்தத் தடையும் இன்றி பயன்படுத்தலாம். வாட்ஸ் அப் தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான்.

அதாவது, தங்களின் பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பதுதான் அது. அதை சுற்றி வளைத்து எனச் சொல்லாமல் சொல்கிறார்கள். அதனால் ஒன்று இந்தப் புதிய பிரைவசி பாலிஸியை ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் வேறு குறுஞ்செய்தி தளத்திற்கு மாற வேண்டும்.

Exit mobile version