அமெரிக்க கடற்படையில் முதல் கறுப்பின பெண் விமானி

அமெரிக்க கடற்படை தனது முதல் கருப்பின பெண் விமானியை வரவேற்றுள்ளது. இதன்மூலம் வரலாற்றை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க கடற்படை விமான பயிற்சி மையம் ட்வீட் செய்துள்ளது.

லெப்டினன்ட் ஜே.ஜி. மேட்லைன் ஸ்வெகிள் கடற்படையின் விமானப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியை முடித்துவிட்டார். இந்த மாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்” என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தைப் பெறுவார்.

ஸ்வெகிள் வர்ஜீனியாவின் பர்க் நகரைச் சேர்ந்தவர். 2017ஆம் ஆண்டில் யு.எஸ். நாவல் அகாடமியில் பட்டம் பெற்றார். டெக்சாஸின் கிங்ஸ்வில்லில் உள்ள ரெட்ஹாக்ஸ் ஆஃப் பயிற்சிப் படை 21க்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1974ஆம் ஆண்டில் ரோஸ்மேரி மரைனர் ஒரு தந்திரோபாய போர் விமானத்தை பறக்கவிட்ட பெண்மணியாக வரலாறு படைத்த பின், 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வெகிளின் நியமனம் மூலம் புதிய வரலாறு ஆரம்பித்துள்ளது.

Exit mobile version