டாலர் வர்த்தகத்தை குறைக்க திட்டம் போடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில் அமெரிக்க டாலரினை அடிப்படையாக கொண்டுதான் மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் ரஷியாவுடன் பாகிஸ்தானின் எண்ணெய் தொடர்பான வர்த்தகம் சீன நாட்டின் நாணயமான யுவான் வர்த்தகத்தில் உள்ளது. அதன்மூலமாக ரஷியா கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் வழங்கி இருக்கிறது. அப்போது நட்பு நாணயங்களில் செலுத்திய பணம் மூலம் பாகிஸ்தானுக்கு எண்ணெய் வழங்க தொடங்கியதாக ரஷிய எரிசக்தி துறை மந்திரி நிகோலாய் ஷுல்கினோவ் பத்திரிக்கை நபர்களிடம் கூறியிருக்கிறார். இந்தநிலையில் ரஷியாவுடனான பரிவர்த்தனைகளில் பல்வேறு நாணயங்களை பயன்படுத்தவும், இரு தரப்பு வர்த்தகத்தில் டாலரின் பங்கை குறைக்கவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது என அந்த நாட்டின் வர்த்தக மந்திரி சையது நவீத் கமர் அறிவித்துள்ளார். குறிப்பாக பண்டமாற்று முறையை தொடங்குவதன் மூலம் வெளிநாட்டு நாணயங்களை நம்பியிருப்பதை குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version