பெண்கள் மந்திரிகளாக முடியாது, அவர்கள் குழந்தை பெற்க வேண்டியவர்கள் என தலிபான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பழமைவாத விரும்பிகளான தலிபான்கள் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுதும் பெண்களுக்கு மந்திரி சபையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையே திரைச்சீலை கொண்டு மறைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மந்திரி சபையில் பெண்களுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான் செய்தி தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி, ஆப்கானிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை மந்திரி சபையில் அனுமதிக்க முடியாது எனவும், அவர்கள் பிரசவத்திற்க்காக மட்டுமே தங்களை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், பெண்களை மந்திரி சபையில் அனுமதிப்பது அவர்களால் சுமக்க முடியாத பாரத்தை அவர்கள் கழுத்தில் வைப்பது போன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.