சீனாவில் 48,000 ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட கரடி பார்வையாளர்களை கவர்ந்து உலக சாதனை படைத்துள்ளது.
பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே காதலர்கள் வித்தியாசமான முறையில் தங்கள் அன்பை பரிமாறி வருகின்றனர். இதையொட்டி சீனாவில் ஹூனான் மாகாணத்தில் 108 ஜோடிகளின் திருமண நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 48000 ரோஜா மலர்களால் 20 அடி உயரத்தில் கரடி ஒன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. 15 அடி 10 அங்குல நீளம் , 12 அடி 10 அங்குல அகலம் மற்றும் 20 அடி 2 அங்குல உயரத்தில் மெல்லிய கம்பிகளைக் கொண்டு இந்த கரடி உருவாக்கப்பட்டதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வானிங் நகரில் உருவாக்கப்பட்ட இந்த கரடி ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கரடி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.