ரஷ்யாவில் புதிதாக 5,940 பேருக்கு கொரோனா தொற்று!

 ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 5,940 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் ரஷ்யா 4 வது இடத்தில் உள்ளது. நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க அதிபர் புதின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். தொற்று காரணமாக மாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கொரோனா நோய்க்கான பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய் தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,940 பேர் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 1,556 பேருக்கு அதாவது 2.6 சதவீதத்தினருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,77,486 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நேற்று ஒரே நாளில் நோய் தொற்றுக்கு 85 பேர் பலியாகினர். ரஷ்யாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,427 ஆக உயர்ந்தது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 5,54000 பேர் குணமடைந்துள்ளனர்.

Exit mobile version