பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாய் பகுதியிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. இரவில் உறக்கத்தில் இருந்த மக்கள் பலரும் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் வீடுகளிலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் சமீப காலமாக அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.