8 வயது சிறுமியும், 11 அடி மலைப்பாம்பும் ஒரே நீச்சல் குளத்தில் நீந்தும் ஆச்சரியமூட்டம் காட்சி வைரல்…

இஸ்ரேலில் மலைப்பாம்புடன் சிறுமி ஒருவர் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோ ஒன்று சமூகவளைதளங்களில் வைரலாகி, மக்களிடையே அதிர்ச்சிக் கலந்த ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது.
8 yr old girl with python

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி இன்பார், 11 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சிறுமி இன்பார், தனது பெற்றோருடன் தெற்கு இஸ்ரேலில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசித்து வருகிறார். 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பின் பெயர் பெல்லி எனவும், பெல்லி சிறுமியின் செல்லப்பிராணி என்றும் கூறப்படுகிறது.

தற்போது பரவி வரும் கொரோனாவின் காரணமாக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், சிறுமி இன்பார் மலைப்பாம்புடன் அதிகநேரத்தை செலவிட்டு வருவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமி இன்பார் இதுப்பற்றி தெரிவிக்கையில், நான் பாம்பை மிகவும் நேசிக்கிறேன். எனது நேரத்தை செலவழிக்க, இது எனக்கு மிகவும் உதவுகிறது என்றும் சில சமயங்களில் நான் பாம்புகளுக்கு அவற்றின் தோலை உரிக்கவும் உதவுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுப்பற்றி இன்பாரின் தாய் சரித் ரெகேவ் கூறும்போது, எனது மகள் இங்கு இருக்கும் எல்லா விலங்குகளுடனும், பாம்புகளுடனும் ஒன்றாக சேர்த்து வளர்க்கப்பட்டாள். இன்பார் குழந்தையாக இருக்கும்போதே, அவள் பாம்புடன் ஒன்றாக நீச்சல் குளத்தில் நீந்துவாள். தற்போது இன்பார்-ம் வளர்ந்துவிட்டாள், பாம்பும் வளர்ந்துவிட்டது. அதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக குளத்தில் நீந்துகிறார்கள். இதில் எங்களுக்கு ஆச்சரியப்படும் விதமாக ஒன்றும் இல்லை, இது எங்களுக்கு மிகவும் இயல்பானதாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

என்னதான் அவர்கள் சொன்னாலும், இந்தப் புகைப்படத்தையும், வீடியோவையும் பார்க்கும் அனைவரும் வாயடைத்துப் போயுள்ளனர்.  

Exit mobile version