ஜியோமி உள்ளிட்ட 9 சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்காவில் தடை

ஜியோமி உள்ளிட்ட 9 சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

வாஷிங்டன் :

உலகில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் முன்னணியில் உள்ளது. சீனா உடனான உறவில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அதிபர் டிரம்ப் 4 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்கா சீனா இடையே வர்த்தகம், மனித உரிமை மீறல் போன்ற காரணங்களாக பனிப்போர் நடந்து வருகிறது.

Read more – சீனாவில் மீண்டும் பரவிய கொரோனா : ஐஸ் கிரீம் மூலம் பரவியதால் அதிர்ச்சி

சீன ராணுவத்துக்கு சொந்தமான அல்லது சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய அமெரிக்கா அதிபர் டிரம்ப் தடை செய்தார். இந்தநிலையில், தற்போது சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, விமான தயாரிப்பு நிறுவனமான கோமேக் உள்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு, இந்த 9 நிறுவனங்களிலும் அமெரிக்காவில் மற்றும் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலீடு செய்திருந்த அமெரிக்கர்கள் வரும் நவம்பர் 11 ம் தேதிக்குள் பங்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version