35 வருட பயணம் எழுதியவர்கள் இடமே திரும்பி வந்த கடிதம் !!

35 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி அனுப்பப்பட்ட  கடிதம் ஒன்று, அதனை எழுதியவரிடம் தற்போது திரும்பி வந்துசேர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிராட் வாட்ச்முத் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து டெலாவேர் ஆற்றில் இருக்கும் குப்பைகளை   அகற்றும் வேலையை செய்து கொண்டு இருந்தார்கள் அதில்  குறிப்பாக மிதந்து வரும் பாட்டில்களைஎப்போதும் சேகரித்து வைக்கும் பழக்கம் அவர்களிடத்தில் உண்டு .அதுபோலவே  ஆற்றில்மிதந்து வந்த ஒரு பாட்டிலை குப்பை என நினைத்து சேகரித்தனர். ஆனால் அதன் உள்ளே ஒரு பேப்பர் தென்பட்டது  அவர்களிடத்தில் சந்தேகத்தையும் ஆர்வத்தையும் தூண்டியது.  அதனை உடனே திறந்து பார்த்தார்கள் அதில் ஒரு கடிதம் இருந்தது.

அந்தக் கடிதம் சென்ற 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி  எழுதப்பட்டிருந்தது.  அந்த  கடிதத்தினை  ஸ்டேஸி வெல்ஸ் மற்றும் அவரது உறவினருமான கேத்தி ரிடில் மற்றும்  ஆகியோர் எழுதி இருந்தார்கள். அதில் அவர்களது குடும்பத்தின்  அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பற்றி தகவல்கள் எழுதப்பட்டிருந்தது.  இதனை படித்த வாட்ச்முத் நண்பரின் துணையோடு  இந்த கடிதத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் இந்த கடிதத்தை எழுதிய கேட்டில் சில கிலோ மீட்டர் தூரத்திலேயே வசிப்பதை கண்டறிந்தார் இதனை அவரிடம் பத்திரமாக சென்று சேர்த்தார்

கடிதம் தனக்கு திரும்ப கிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்து  கொண்ட ரிடில் கூறுகையில், ‘இத்தனை   வருடங்கள் கடந்தது  பிறகும் நாங்கள் எழுதிய கடிதம் துளி சேதமும் இல்லாமல் மீண்டும் எங்களிடம் வந்தது மகிழ்ச்சியாக மிகுந்த ஆச்சரியம் கலந்து கொடுத்தது நானும், எனது உறவினரும் கடற்கரை பகுதியில் தங்கியிருந்தபோது இந்த கடிதத்தை எழுதி இருந்தோம் அது எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்று பார்க்கலாம் என்று விளையாட்டாக தான் எழுதிவிட்டு சென்றோம் .ஆனால் ,அது தற்போது எங்களுக்கு மிக அருகிலேயே வந்துவிட்டது உலகம் முழுவதும் அது பயணித்து  வந்திருக்கலாம்  என்று வியப்புடன் தெரிவித்தார்கள். 

Exit mobile version