ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இனி சைரனும் போடக்கூடாது.. சவுண்டும் போடக்கூடாது.. போலீஸ் என்று பயந்து கொலை மிரட்டல் விடுத்த மாஃபியா கும்பல்

இத்தாலியில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இனி சைரனை பயன்படுத்த கூடாது என்று மாஃபியா கும்பல் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தாலி :

இத்தாலி நேப்பிள்ஸ் பகுதியில் மாஃபியா கும்பல் ஒன்று போதை கடத்தல் செய்து வருகின்றது. அந்த பகுதி வழியாக ஆம்புலன்ஸை இயக்கும் போது சைரனை பயன்படுத்த வேண்டாம் என்று அதை இயக்கும் டிரைவர்களுக்கு மாஃபியா கும்பல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மிளிரும் விளக்குகளையும் பயன்படுத்த வேண்டாம் எனவும்,அந்த ஒளியை பார்த்து போலீஸ் என குழம்பி விடுவதால் அவர்கள் போதை பொருட்களை கடத்தும் போதும், வாடிக்கையாளர்கள் வாங்கும் போதும் பயந்து ஓடிவிடுவதால் எங்களின் வியாபாரம் பதிப்படைவதாக தெரிவித்து உள்னனர்.

Read more – உன் பொண்ண தேடணும்னா… டீசல் போட காசு கொடு… மாற்றுத்திறனாளி தாயிடம் 15 ஆயிரம் பணம் பறித்த உ.பி. போலீஸ்

மேலும், அதன் வழியாக வந்த ஒரு ஆம்புலன்சை வழி மடக்கிய அந்த மாஃபியா கும்பல் இனி சைரன் பயன்படுத்தினால் சுட்டு கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே இந்த மிரட்டல் தொடர்பாக இத்தாலி போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அந்த மாஃபியா கும்பல் என்று தேடி வருகின்றனர்.

Exit mobile version