மலேசியாவில் வளர்ப்பு மகளை வன்கொடுமை செய்த தந்தை : 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு

வளர்ப்பு மகளை 2 ஆண்டுகளில் 105 முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி மலேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியா :

மலேசியாவை சேர்ந்த தம்பதியினர் கடந்த 2015 ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளனர். இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தையும் ஒன்று உள்ளது. கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற அந்த பெண் 2016 ல் மறுமணம் செய்துகொண்டு தனது பெண் குழந்தை மற்றும் அந்த புதிய நபருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

அந்த புதிய கணவர் வேலையில்லாத காரணத்தினால் வீட்டில் இருந்த நிலையில் தனது பெண் குழந்தையை பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.இந்தநிலையில், பெண் மீது அதிக மோகம் கொண்ட அந்த நபர் தனது 12 வயது வளர்ப்பு மகளை கடந்த 2018 ம் ஆண்டு ஜனவரி 5 ம் தேதி முதல் 2020 பிப்ரவரி 24 ம் தேதி வரை சுமார் 105 முறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொடுமை செய்துள்ளான். மேலும், இதுகுறித்து வேறு யாரிடம் தெரிவித்தால் உன்னையும், உனது அம்மாவையும் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

Read more – அலுவலக பெண்கள் கழிப்பறையில் சிசிடிவி கேமரா பதித்த உரிமையாளர் : பெண் ஊழியர்கள் அதிர்ச்சி

தீடிரென அந்த பெண் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் இதுகுறித்து அந்த குழந்தையின் அத்தை தகவலறிந்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது அத்தையிடம் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லிவிட, அந்த சிறுமியின் தாயும் அத்தையும் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மலேசிய வாழ் தமிழர் குணசுந்தரி என்ற நீதிபதி, 1050 ஆண்டுகள் சிறை தண்டனையும், 24 பிரம்படிகளும் தண்டனையாக வழங்க அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். தற்போது இதுகுறித்த தகவல்கள் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி அந்த உத்தரவு பிறப்பித்த மலேசிய வாழ் தமிழர் குணசுந்தரி என்ற நீதிபதிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version