பிரேசிலின் சாண்டா கேடரினாவில் கனமழை, வெள்ளம்; மீட்பு பணி தீவிரம்!

பிரேசிலில் சாண்டா கேடரினா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் தங்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புப்பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version