அமேசான் தோல்வி; தொழிலாலர்கள் வெற்றி..!!

amazon setups labour union at us
amazon protest

அமெரிக்காவில் ஊழியர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததை அடுத்து, முதன்முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது வரலாற்றில் முக்கிய நகர்வாக அமைந்துள்ளது.

அமெரிக்க நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது அமேசான். அந்நிறுவனத்தில் கிடங்கில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது அமேசான் நிறுவனம் பணி நீக்கம், முறையாக ஊதியம் வழங்காதது, போதியளவில் சம்பள உயர்வை வழங்காதது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.

இதையடுத்து அமேசானுக்கு எதிராக ஊழியர்கள் புகார் கூற துவங்கினர். தொழிற்சங்கம் அமைக்க அவர்கள் முயசித்தனர். ஆனால் அமேசான் நிறுவனம் அதற்கு அனுமதி கொடுக்கவே இல்லை. இறுதியாக தொழிற்சங்கம் அமைப்பதற்காக தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் அமேசான் ஊழியர்கள் பெரும் வெற்றி அடைந்தனர். இதையடுத்து விரைவில் அமெரிக்காவில் அமேசான் ஊழியர்களின் தொழிற்சங்கம் அமைக்கப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள அமேசான் நிறுவனத்தின் கிளைகளிலும் இது எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version