SeithiAlai

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா பரிசோதனை!!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கடந்த புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போது டிரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

இதனிடையே தனது உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை நேற்று இரவு உறுதி செய்தார் டிரம்ப். அத்துடன், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறி உள்ளார்.

டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில் ‘சிறிய இடைவெளி கூட எடுக்காமல் மிகவும் கடினமாக உழைத்து வரும் ஹோப் ஹிக்ஸ், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். நானும், நாட்டின் முதல் குடிமகளும் எங்கள் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் எனவும் அதேசமயம் எங்களை தனிமைப்படுத்தும் நடைமுறையையும் தொடங்குவோம்’ என டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version