அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் விவாதம் தேதி மாற்றம்…

அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் விவாதம் செய்யும் தேதி மாற்றம்.

உலகில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிம்புக்கும், அமெரிக்க வேட்பாளர் ஜோபிடனுக்கும் பலவித கருத்துமோதல்கள், விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக அக்டோபர் 15 ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடனுக்கு இடையே விவாதம் இல்லை என்று அதிபர் விவாதங்களுக்காக ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான மாற்றுத்தேதி அறிவிக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணொலி மூலம் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version