இலங்கையை புரட்டி போட்ட புரெவி புயல் : வெள்ளத்தில் மிதக்கும் யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மாகாணங்கள்

புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

இலங்கை:

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்து தற்போது பாம்பன் பாலத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டு உள்ளது.புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் திரிகோணமலை மற்றும் முல்லைத்தீவுக்கு இடையே புரெவி புயல் நேற்று கரையை கடந்த போது சுமார் 100கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது.இதனால் அந்த பகுதி முழுவதும் மரங்கள் சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புரெவி புயல் காரணமாக இலங்கையில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட தாக்கத்தால் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.இந்த தொடர் மழை காரணமாக யாழ்ப்பாணம் பகுதியில் 459 குடும்பங்களை சேர்ந்த 1,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

Exit mobile version