நேரலையில் செய்தியாளரிடம் செல்போனை பறித்துச் சென்ற நபர்! வைரலாகும் போட்டோ

நேரலையில் செய்தியாளரிடம் இருந்து ஒரு மர்ம நபர் செல்போனைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் நாள்தோறும் ஏரளமான செய்திகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சில நல்ல சம்பவங்களும் உண்டு மோசமான சம்பவங்களும் உண்டு. இவற்றில் சில சம்பவங்கள் நமக்காயினும் சரி மற்றவர்களுகு ஆயினும் சரி நடக்கும்போது அது செய்திகள் ஆகிறது.

அதுபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நியூஸ் சேனல் ஒன்று அங்குள்ள நிலவரத்தைப் பற்றி விளக்குவதற்காக தனது  செய்தியாளரை அங்கு அனுப்பியது. செய்தியாளர் அங்கு நின்று நேரலையில் கேமராவுக்குமுன்  பேசத் தயாராகும்போது அவரை நெருங்கிய ஒரு நபர் அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு போனார். இந்தக் காட்சி அப்படியே நேரலையில் ஒளிபரப்பானதால் பெரும் பரப்பானது. இந்த  வீடியோ வைரலாகி வருகிறது.

Exit mobile version