ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர்கள் சீனாவில் இருந்து தப்பியோட்டம்…

கொரோனா வைரஸ் தொடங்கி பல விவகாரங்களில் உலக நாடுகள் சீனாவிற்கு எதிராக உள்ளது அந்த வகையில் ஆஸ்திரேலியா-சீனா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஆஸ்திரேலிய அரசு இணையதளங்களில் சைபர் தாக்குதல், வர்த்தகம் மோதல் போன்றவற்றால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பெரும் அளவில் சரிந்துள்ளது.இந்த நிலையில், சீனாவின் அரசு ஊடகமான CGTN செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷேங் லி என்ற பெண் செய்தித்தொகுப்பாளராக செயல்பட்டுவந்தார். இவர் ஆஸ்திரேலியாவை
சேர்ந்தவர் ஆவார்.

இவர் தொகுத்து வழங்கும் செய்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேறு ஒருவர் தொகுத்து வந்ததாக தெரிகிறது . மேலும், ஷேங் லி எங்கு சென்றார் என்ற தகவல் மர்மாகவே இருந்தது.

இந்த நிலையில் அந்த ஆஸ்திரேலிய பெண் செய்தித்தொகுபாளர் ஷேங் லி-யை சீன போலீசார் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கைது செய்திருப்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஷேங் லி எந்த விதத்தில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்ற தகவலை
சீனா இன்னும் தெரிவிக்கவில்லை.

கைது செய்யப்பட்ட ஷேங் லி-யை விடுதலை செய்யவேண்டும் என ஆஸ்திரேலியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் ABC மற்றும் AFR ஆகிய செய்தி நிறுவனங்களின் கிளைகள் சீனாவிலும் உள்ளது. இந்த கிளைகளின் முக்கியப்பொறுப்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவரும் சீனாவில் தங்கி தங்கள் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

ஆனால், CGTN செய்தி தொகுப்பாளர் ஷேங் லி போலீசாரால் கைது செய்யப்பட்டதையடுத்து இவர்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.

மேலும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக உங்களிடம் சில விசாரணை நடத்தவேண்டும் ஆகையால் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி 2 பத்திரிக்கையாளர்களுக்கும் சீன அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.இதனால் அச்சமடைந்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகிய இருவரும் சீனாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அங்கிருந்து அவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர ஆஸ்திரேலியா தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை யடுத்து, தூதரக ரீதியிலான பல கட்ட நடவடிக்கைகளுக்கு பின் இரண்டு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல சீனா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியையடுத்து தூதரக உதவியுடன் சீனாவில் இருந்து தப்பித்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகிய 2 பத்திரிக்கையாளர்களும் நேற்று ஆஸ்திரேலியா வந்தடைந்துள்ளனர்.

Exit mobile version