வங்காளதேசத்தில் எரிவாயு குழாய் கசிந்த விபத்தில் 17 பேர் பலி

வங்காளதேசம் நராயங்கன்ச் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் எரிவாயு குழாய் கசிந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டாக்கா:

வங்காளதேசம் டாக்காவுக்கு அருகில் உள்ள நராயாங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த வெள்ளியன்று இரவு ஏற்பட்ட விபத்துக்கு, எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவே காரணம் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட 37 பேர் உடனடியாக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் சிலரது நிலைமை மோசமாக இருப்பதாக தெரிகிறது.

இந்த விபத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்த கூட்டத்தில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலும் நிலவுகிறது . இந்த விபத்து குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version