.வீட்டில் இருந்து போர் அடிக்குது என்னை சிறையில் தள்ளுங்கள் என்று லண்டனைச் சேர்ந்த ஒருவர் தானாக சிறைக்கு சென்று போலீசில் சரணடைந்து இருக்கிறார்.
ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்து எரிச்சலாகி விட்டதால், எஞ்சிய காலத்தை அமைதியாக கழிக்க விரும்புவதாகக் கூறி, சிறையில் அடைக்குமாறு கூறி, காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தற்போது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விட சிறை வாழ்க்கை மேலானது என்றும் அந்த நபர் கூறியுள்ளார். வீட்டில் அவர் எந்த ஒரு துன்பத்தை அனுபவித்திருந்தால் சிறைக்குச் செல்லும் முடிவை எடுத்திருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.