கம்மி விலையில் கொரோனாவுக்கு மருந்து பில் கேட்ஸ் அறக்கட்டளை தாராளம் !!!

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தலா ரூ .225 க்கு 10 கோடி டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்க சுமார் 1,125 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

நடுத்தர வருமானங்கள் கொண்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை குறைந்த  விலையில் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சீரம் இன்ஸ்டிட்யூட்.  தற்போது இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாகி இந்த தடுப்பு மருந்தினை உலகெங்கும் சேர்க்கும் பொறுப்பை  கொண்டுள்ளது.

இந்நிலையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்துடன் சீரம் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றையும்  செயல்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிற்கு  குறைந்த விலையில் அதாவது ரூ225க்கு சீரம் நிறுவனம் தயாரித்து வழங்க முடியும் .

உலகம் முழுவதும் மிரட்டும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்  முதலிடத்தில் அமெரிக்கா  இடம்பிடித்துள்ளது.அதற்கு அடுத்தாற்போல் பிரேசில். தற்போது  இந்தியா மூன்றாவது இடத்தினை அடைந்துள்ளது. நேற்று மட்டுமேஇந்தியாவில் 61,537  பேர்களுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 20,88,612 நபர்களுக்கு கொரோனாதொற்று பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. அதில் 42,518 நபர்கள் இறந்து விட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது. 14,27,006   நோயாளிகள் இதுவரை கொரோனாவிலிருந்து இருந்து முற்றிலும் குணம் அடைந்து மீண்டு உள்ளனர்.

Exit mobile version