சீனா குறித்து அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியா சீனா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் சீனாவால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அமெரிக்கா ஆணையம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

லடாக்கின் இந்திய சீன எல்லைப்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளது. இந்திய பகுதியான இதை சீனா சொந்தம் கொண்டாடி ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. முன்னதாக கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். ஆனால் சீனா அதிகாரப்பூர்வமாக உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிடவில்லை.

இந்நிலையில், இத்தாக்குதலானது சீனாவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என அமெரிக்க சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வுக்கான ஆணையம் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அணையம், இத்தாக்குதலானது இந்தியா தனது பகுதியில் அமைத்து வரும் கட்டமைப்புகளை தடுக்கவோ அல்லது அமெரிக்காவுடன் நட்புறவுடன் இருப்பதை எச்சரிப்பதற்காக நடந்த ஒன்றாக இருக்கலாம் என தெரிவித்தது.

இதையும் படியுங்கள் : மருமகனுக்கு AK-47 துப்பாக்கி பரிசளித்த மாமியார்

Exit mobile version