நடுவானில் பிறந்த குழந்தைக்கு புதுமையாக பெயர் வைக்கப்பட்ட விநோதம்..!!

childbirth
frontier airlines

விமானத்தில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, பணிப்பெண் உதவியுடன் பிறந்த குழைந்தைக்கு தாய் புதுவிதமாக பெயர் வைத்த சம்பவம் உலகளவில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்துக்கு செல்ல நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் ஃபிரெண்டியர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் கொலராடா என்கிற பகுதியில் இருந்து பயணம் செய்தார். விமானம் நடுவனில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் பதற்றமடைந்த விமானி, விமானத்தை பென்சகோலா விமான நிலையத்தில் தலையிறக்க முயன்றார். ஆனால் அதற்குள் விமானப் பணிப்பெண் பிரசவ வலி பெண்ணுக்கு உதவி செய்து, குழந்தையை பெற்றெடுக்க உதவினார். அந்த விமானம் தரையிறங்கியது, மருத்துவர்கள் குழு குழந்தை ஆரோக்கியமானதாக உள்ளதா என்று பரிசோதனை நடத்தினர்.

அதன்மூலம் குழந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பது தெரிந்தது. இதையடுத்து குழந்தை நடுவானில் பிறந்ததால், குழந்தைக்கு ‘ஸ்கை’ (வானம்) என்று பெயரிட்டார். ஃபிரெண்டயர்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது.

Exit mobile version