இந்திய குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை உளவு பார்க்கும் சீனா – இன்னும் நீளும் லிஸ்ட்…

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தோனேசியா, மலேசிய தலைவர்களுடன் இந்திய குடியரசுத் தலைவர், பிரதமரை உளவு பார்க்கும் சீனா: 5 முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள், எம்.பி.க்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு.

இந்திய பிரபலன்களான குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் மேலும் இன்னும் பல பிரபலங்களை சீனா உளவு பார்த்துகொண்டு இருந்திருக்கின்றது. இப்படி சுமார் சுமார் 10 ஆயிரம் இந்திய பிரபலங்களை சீன நிறுவனம் உளவு பார்த்திருப்பது அம்பலமாகி உள்ளது.

இந்தியா, இந்தோனேசியா, மலேசியா உட்பட சுமார் 22-க்கும் மேற்பட்ட அண்டை நாடுகளின் நிலம், கடல் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அமெரிக்க போலவே தனையும் வல்லரசு நாடக மாற்ற சீனா இப்போது ஹைபிரிட்’ போர் என்ற மறைமுக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

ஜென்ஹுவா டேட்டா இன்பர்மேஷன் டெக்னாலஜி கோ நிறுவனம் என்ற சீனா நிறுவனமானது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தோனேசியா, மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், அரசு, நீதித் துறை தலைவர்கள், மூத்த அதிகாரிகளை உளவு பார்த்திருக்கின்றது என்பது இப்போது அம்பலம் ஆகி இருக்கின்றது.

இந்த நிறுவனமானது பல நாடுகளின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல பிரபலங்களின் நெருக்கமான தகவல்களையும் ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக திருடிவருகிறது.

இந்தியாவை சேர்ந்த ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ஆஸ்திரேலியாவை சேர்ந்த `ஆஸ்திரேலியன் பைனான்ஷியல் ரீவியூ’, பிரிட்டனை சேர்ந்த ‘டெய்லி டெலிகிராப்’ உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக சீன நிறுவனத்தின் திரைமறைவு ரகசியங்களை பேராசிரியர் கிறிஸ்டோபர் பால்டிங் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

Exit mobile version