அமெரிக்காவில் கொரோனா பரவலை பற்றி எந்தவித அச்சமும் இன்றி ஆயிரக்கணக்கானோர் திருமணம் ஒன்றில் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருட இறுதியில் சீனாவின் உகான் பகுதியில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா இன்னும் பல நாடுகளை தன் கட்டுக்குள் வைத்துள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 1,25,89,088 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,62,701 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அங்கு இன்னும் பல பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், வில்லியம்ஸ்பர்க் என்ற பகுதியில் கடந்த சில தினங்களுக்கு நடைபெற்ற திருமணத்தில் அதிக பேர் பங்கேற்பதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருமணத்தில் அதிகளவில் விருந்தினர்கள் பங்கேற்க கூடாது என மணமக்களின் பெற்றோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதை எதையும் பொருட்படுத்தாமல் திருமணத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கலந்து கொண்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : லேப்டாப்பால் தெருவுக்கு வந்த குடும்பம்..!