இந்த தலைப்பை பார்த்து நிறைய பேர் பயந்து விடாதீர்கள் அந்த தண்டனை நம்ம நாட்டில் இல்லை எந்த உலக நாடுகளுக்கும் அடங்காத வடகொரியாவில்தான்.

இங்கு கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கை எடுக்கின்றனர். அதில் வினோதம் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் வண்ணமாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீனா வடகொரியா எல்லையிலிருந்து அரை மைல் தூரத்திற்குள் யாரேனும் தென்பட்டால் அவர்களை சுட்டுக்கொல்லம் வினோத சட்டத்தை வடகொரியா அரசு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என அந்நாட்டு அரசு தொடர்ந்து வாதிட்டு வருகிறது. எனினும் கடந்த சில நாட்களுக்கு முன் தென்கொரியாவிலிருந்து வந்த நபர் மூலம் கொரோனா தொற்று பரவியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை யடுத்து வடகொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் அந்நாட்டு அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சீன வடகொரியா எல்லையின் 880 மைல் தொலைவு எல்லைப்பகுதியில் அரை மைல் தூரத்திற்குள் வட கொரிய நாட்டவர் யாரேனும் தென்பட்டால், அவர்களை கண்டதும் சுட்டுக்கொல்ல ராணுவம் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.